Arupathi Moovar Festival @ Mylapore

0
38

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நாளை நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17,ம் தேதி கோலவிழியம்மன் அபிஷேகத்துடன் தொடங்கியது. 18,ம் தேதி கொடியேற்றம், 19,ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டம், 20,ம் தேதி அதிகார நந்தி, 21,ம் தேதி புருஷா மிருகம், 22,ம் தேதி சவுடல் விமானம், 23,ம் தேதி பல்லக்கு என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.01 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’, ‘நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள் பாலித்தார். திருத்தேர் பிற்பகலில் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

Samugamu re theympani seva…:)

Photo Gallery – Click here

 

Comments

comments