Sourashtra Samooga Podhu Sotthukkal Padhukappu Kuzhu

0
536

சௌராஷ்டிரா சமூக பொது சொத்துக்கள் பாதுகாப்பு  குழு
——————————————————————-

The Sourashtra Samuga Podhu Sotthukkal Padhukappu Kuzhu.
Madurai.

E-mail: sourashtrapodhusothu@gmail.com

website: www.sourashtrasamugapodhusotthukkalpadhukappukuzhu.com

நம் சமூக மக்களின் கவனத்திற்கு,

அமைதி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சூதுவாது அறியாதவர்கள் மற்றும் எந்த வம்புகளுக்கும் போகாத மக்கள் என்று பெயர் பெற்றிருப்பது நம் சமூகம். சென்ற நூற்றாண்டில் நமது ஊரில் நம் முன்னோடிகள் பல பொறுப்புகள் வகித்து நமது நிர்வாகத் திறமையினால் thaam சார்ந்த சமூகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த மதுரைரையே முன்னேற்றியுள்ளார்கள். “ராஷ்ட்ரபந்து” திரு. L.K. துளசிராம், “மதுரை காந்தி” திரு. N.M.R. சுப்புராம், “ஆலை அரசர்” திரு. C.S. ராமாச்சாரி, “கல்விபுரவலர் ” திரு. K.L.N. கிருஷ்ணன்போன்றோர் , அவர்கள் செய்த சேவையினால் என்றென்றும், நமது நினைவில் நிற்பவர்கள். ஆனால், தற்பொழுது நமது சௌராஷ்ட்ர மக்களின் தலைமைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நமது சமூகத்தின் விதிவிலக்காக, சில சுயநலமிகள் நமது பொது ஸ்தாபனங்களில் ஊடுருவி குறுக்கு வழியில் பதவியை தக்கவைத்துக்கொண்டு, பொது சொத்துகளை தன்நலத்திற்காக அனுபவிப்பதுடன் தங்களது சொந்தச் சொத்துக்களாக ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அத்தகையோர் நமது பொது ஸ்தாபனங்களில் நிர்வாகக்குழுவில் இடம்பிடித்துகொண்டு இறங்க மறுக்கின்றனர். முறையாக தேர்தல் நடைபெறுவதில்லை, புதிய உறுப்பினர் சேர்கை என்பது “கானல் நீர் ” என்று ஆகிவிட்டது . அவர்கள் நிர்வாகத்தையாவது சரியாக செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை! எங்கும் ஊழல் , எதிலும் ஊழல். ஆணவம், அகம்பாவம், அக்கிரமம் முதலிய எதிர்மறை செயல்களின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறார்கள். தந்திரமான பேச்சுக்களால் சிலர் தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறார்கள். சத்தியவான்கள் போல திரிகிறார்கள். அவர்களை நல்லவர்கள் என்று கூறி ஒரு கூட்டம் துதிபாடுகிறது. மனசாட்சியை மறந்த அவர்களின் செயல்கள் நினைத்தாள் பாவமாக இருக்கிறது. இன்னமும் நேர்மை உறங்கிவிடவில்லை என்பதை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது. அநீதியை விழ்த்த வேண்டிய கட்டாயம் இப்பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதல்லாம் இவைதான் :-

  1. சமூக ஸ்தாபனங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட பதவி வகிப்பவர்களை சௌராஷ்ட்ரா கல்லூரி கவுன்சில் தேர்தல் உறுதியாக தோற்கடிக்க வேண்டும்.
  2.  ஊழல் செய்தவர்கள் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும்.
  3. நேர்மையானவர்களையும், நல்லவர்களையும் சேவை செய்ய முழுமனதோடு தங்களை அர்பணிப்பவர்களையும், அவர்களின் குலம், கோத்திரம் பார்க்காமல் அவர்களை அடையாளம் கண்டு தேர்தெடுக்க வேண்டும்.
  4. வேட்பாளர்கள் கால நிர்ணயத்துடன் கூடிய செயல் திட்டத்தை அறிவிக்க வற்புறுத்தப்பட வேண்டும்.
  5. நமது பொது ஸ்தாபனங்களில் உறுப்பினர்களாக சேர்வது நம் சமூக மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை பறிப்பவர்களை களை எடுக்க வேண்டும்
  6. BYE-LAW வில் திருத்தம் செய்து ஒருவர், ஒரு பதவியை இரண்டு தடவைக்குமேல் வகிக்காமல் இருக்குமாறு மாற்றி அமைக்க தேர்தெடுக்கப்படுபவர்களிடம் வாக்குறுதியைப் பெற வேண்டும்.
  7. ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்கையில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்க வேண்டும் .
  8. இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தி சேவை மனப்பான்மையை அறிவுறுத்தும் பண்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். திறமையற்ற வாரிசுகளை நிராகரிக்க வேண்டும். திறமை வாய்ந்த, தலைசிறந்த அடுத்த தலைமுறையை ஏற்கும் மனோபாவம் ஊருவகப்படவேண்டும்.
  9. பொது வாழ்வில் இன்னமும் ஈடுபடாத பல நல்ல உள்ளங்களை இனம் கண்டு, நாடிச்சென்று, அவர்களின் திறமையையும், அறிவாற்றலையும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கும் நல்ல இதயங்களை ஊக்குவிக்க வேண்டும்.
  10. போட்டியிடும் வேட்பாளர்களில் மறைந்திருக்கும் மாணிக்கங்களை மட்டும் வெற்றிபெறச் செய்வது நமது கடமை.

இவை பத்து கட்டளைகள் அல்ல. சற்றே தளர்ந்துள்ள நம் சமூகத்தை முன்னேற்றத் துடிக்கும் பாராபட்சமில்லாத எளிமையான நலம் விரும்பிகளின் வேண்டுகோள். புதிய நம்பிக்கையின் விடியலை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பர்களின் விண்ணப்பம்.

Trustee
[indeed-my-team team=’sspsp-kuzhu’ order_by=’date’ order=’ASC’ limit=’11’ show=’name,photo,job,social_icon’ page_inside=’0′ inside_template=’IMT_PAGE_TEMPLATE’ theme=’theme_1′ color_scheme=” slider_set=’0′ columns=’4′ ]

Comments

comments