இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2015

0
295

pongal_wishes

உலகெங்கும் உள்ள எங்களது அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களுக்கு sourashtraonline இனிய பொங்கல் தின

வாழ்த்துக் கவிதை இதோ…

பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல்
போல் தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!

பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!

சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் போல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!

தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி சொல்லும் நல்மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்…
நன்மைகளே விளையட்டும்..!

புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

kavithai courtesy: மாலைமலர்

Comments

comments